அரசுத் துறைமுகங்கள்
அரசுத் துறைமுகங்கள்:
அரசுத் துறைமுகங்கள் மாநில அரசால் பல்நோக்கு துறைமுகமாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன. இத்துறைமுகங்கள் பழமையான காலத்திற்கு முந்தைய வரலாற்று துறைமுகங்களாகும். இத்துறைமுகங்கள் அரசு நிதியுதவியின் அடிப்படையில் படிப்படியாக மேம்படுத்தப்படுகின்றன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள், ஆற்றங்கரை துறைமுகங்களாகும். மேலும், இத்துறைமுகங்களில் கப்பல்கள் கடலின் நடுப்பகுதியில் நங்கூரமிடப்பட்டு சரக்குகள் மிதவைகள் மூலம் ஏற்றப்படுகிறது/இறக்கப்படுகிறது. பயணப் படகுப் போக்குவரதிதினை கண்காணிக்கும் பணிகள் கன்னியாகுமரி துறைமுகத்தில் நடைபெறுகிறது. பாம்பன் துறைமுகத்தில் பாம்பன் கால்வாயைக் கடந்து செல்லும் சிறு கலங்களுக்கு வழிகாட்டும பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா – இலங்கை இடையே பயணப் படகுப் போக்குவரத்து இராமேசுவரம் துறைமுத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குளச்சல் துறைமுகத்தில் எவ்வித செயல்பாடுகளும் இல்லை.