நாகப்பட்டினம் துறைமுகம்
நாகப்பட்டினம் துறைமுகம்:
நாகப்பட்டினம் துறைமுகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான துறைமுகமாகும். நாகப்பட்டினம் துறைமுகம் கடுவையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தினை அடுத்து தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது.
துறைமுகத்தின் அட்சதீர்க்க பரவல் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
100 790 |
49’ 51’ |
36’’ 06’’ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
100 790 |
49’ 57’ |
36’’ 06’’ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
100 790 |
44’ 57’ |
51’’ 30’’ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
100 790 |
44’ 51’ |
51’’ 06’’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை (நிலை) எண்.110, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.என் 2), தேதி 18.06.2009.
துறைமுகத்திற்கான கடல்பரப்பு விளக்கப்படத்தின் எண் விவரங்கள்:
இந்திய கடலியல் வரைபட எண் :BA 575
இந்திய விளக்க படங்கள் : 3007, 3033.
நங்கூரம் பாய்ச்சுமிடம்:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சுமிடம் ஒரு திறந்த வெளி நங்கூரமிடும் இடமாகும். கலங்கரை விளக்கத்திலிருந்து 1.5 மைல் தொலைவில் 2810 மற்றும் 2850 இடையில் சுமார் 8 முதல் 10 மீ ஆழத்தில், கப்பலுடைய அமிழ் அளவுக்குத்தக்க இடத்தில் நங்கூரம் பாய்ச்சலாம்.
சரக்கு இயக்க செயல்பாடுகள்:
நாகப்பட்டினம் ஒரு திறந்த வெளி துறைமுகம் ஆகும். இதன் கரையிலிருந்து சற்று தொலைவில் கப்பல்கள் நங்கூரமிடபடுகின்றன மற்றும் சரக்குகள் சரக்கேற்றும் மரக்கலம்/சிறு படகுகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. சரக்கு இயக்கத்திற்காக 200-300 மில்லியன் டன்கள் சுமந்து செல்லும் திறன் கொண்ட தனியார் படகுகள்/மிதவைகள் உள்ளன.
சரக்கு கையாளுதல்:
கப்பல் முகவர்கள் தங்களுடைய சரக்கேற்றும் தொழிலாளர்களை ஈடுபடுத்துகின்றனர்.
கடற்பயண பலசரக்குப் பொருட்கள் :
பொருட்கள் கிடைக்கும்.
துறைமுகத்தை பயன்படுத்தும் அனுமதி:
சாதாரண நிகழ்வுகளில் உள்ளூர் நகராட்சி சுகாதார அதிகாரி அனுமதியை வழங்குகிறார்.
துறைமுக வேலை நேரம்:
துறைமுகம் பகல் நேரங்களில் இயங்குகிறது. அதாவது 0600-1800 மணி நேரம், மேலும் சாதகமான பருவகால நிலையில் சிறப்பு கோரிக்கையின் பேரில் இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சரக்குகளை கையாள தேவையான உபகரணங்கள்:
கப்பலில் சரக்கேற்றும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் தேவைக்கேற்ப சரக்குகளைக் கையாள்வதற்கு தங்கள் சொந்த/தனியார் பளுதூக்கிகள், பாராந்தூக்கிகள் போன்றவற்றை ஈடுபடுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
VHF தொடர்பு:
அலைவரிசை எண். 16ல்
பார்வை நேரம்: 0900-1300
1400-1800 (அனைத்து வேலை நாட்களிலும்).
வழிகாட்டும் கருவிகள்:
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கமானது அட்சரேகை 100 49‘ 9“ வடக்கு, தீர்க்கரேகை 790 51‘ 11“ கிழக்கில் உள்ளது.
பன்னாட்டு கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு விதித்தொகுப்பின் கீழ் இசைவு:
இத்துறைமுகம் பன்னாட்டு கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு விதித்தொகுப்பின் கீழ் இசைவு இணக்கச் சான்றிதழுடன் இயங்குகிறது.
தொடர்வு விவரங்கள் :
O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,
துறைமுக அலுவலர்,
துறைமுக அலுவலகம், நாகப்பட்டினம் – 611 001,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 04365-242255/242363.