கடலூர் துறைமுகம்
கடலூர் துறைமுகம்:
கடலூர் துறைமுகம் வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உப்பனார் (ம) பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி (நங்கூரம்) துறைமுகமாகும். கப்பல்கள் நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களிலிருந்து சிறுகலங்கள்/மிதவைகள் மூலம் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுகிறது. 0.5 கடல்மைல் தொலைவில் 8-10மீ ஆழத்தில் நங்கூரமிடப்படுகிறது. இத்துறைமுகம், சிறுகலன்கள் (ம) உள்நாட்டுக் கலன்களை கையாளக்கூடிய கப்பல்கணையும் துறைமுகமாக (நீர்தடுப்பிகளை நீட்டிப்பு செய்தல், சரக்கு துறை கட்டுதல், காவ்வாயினை தூர்வாருதல்) ஒன்றிய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையின் சாகர்மாலா/உள்நாட்டுச சரக்குத் தோணித்துறை திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையின் மானியத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புவியியல் அமைவிடம்:
இத்துறைமுகம் சென்னைக்கு தெற்கே 180கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரிக்கு தெற்கே 25 கி.மீ தொலைவில் 11042’ வடக்கு அட்சத்திற்கும் 79046’ கிழக்கு தீர்க்கத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
துறைமுகத்தின் அட்சதீர்க்க பரவல் மற்றும் அரசாணை:
1 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
44’ 47’ |
24’ 24’ |
வடக்கு கிழக்கு |
2 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
44’ 50’ |
24’ 48’ |
வடக்கு கிழக்கு |
3 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
36’ 50’ |
45’ 48’ |
வடக்கு கிழக்கு |
4 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
36’ 45’ |
45’ 30’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.110, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.என் 2), தேதி 18.06.2009.
நங்கூரமிடும் இடங்கள்:
பொது சரக்கு கப்பல்களுக்கு: புதிய கலங்கலைர விளக்கத்திலிருந்து 2650 முதல் 2950 வரை.
வெடிக்கும்/ ஆபத்தான/ அபாயகரமான சரக்கு கப்பல்களுக்கு:
புதிய கலங்கரை விளக்கத்திலிருந்து 110 36’ 45’’’ வடக்கு அட்சத்திலிருந்து 790 45’ 30’’ கிழக்கு தீர்க்கம் (அ) 1010 (T) X 2.85 கடல் மைல் தொலைவில்
தற்போதுள்ள கால்வாயின் ஆழம்:
கடலூர் துறைமுகம் உப்பனாறு மற்றும் பரவலாறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. துறைமுக நுழைவாயிலில் குறைந்த அலை நேரத்தில் கால்வாயின் ஆழம் சுமார் 2.5 மீட்டர் சரக்குத் துறையின் ஆழம் சுமார் 3-4மீட்டர் இருக்கும்.
சாலை இணைப்பு:
துறைமுகத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலை NH45A உள்ளது. இதனால் துறைமுகத்திற்கு சாலை இணைப்பு நன்றாக உள்ளது.
இரயில் இணைப்பு:
அகலப்பாதை இணைப்புடன் கூடிய கடலூர் துறைமுக சந்திப்பு துறைமுகத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் கடலூர் துறைகத்திற்கு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம் போன்ற நகரங்களில் இருந்து இரயில் இணைப்பு உள்ளது.
தற்போதுள்ள சரக்குத்துறை:
உயர் பாய்மர கம்ப மின்விளக்கு வசதியுடன் கூடிய 1132.4மீ நீளமுள்ள புணரமைக்கப்பட்ட RCC படகுத்துறை உள்ளது. பொது சரக்குகள், உதிரி சரக்குகள் போன்றவற்றை நங்கூரமிடப்பட்ட கப்பல்களிலிருந்து கையாளுவதற்கு ஏற்றதாக உள்ளது.
சரக்கு சேமிக்கும் இடம்:
துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 18 ஏக்கர் திறந்தவெளி பரப்பில் உப்பனாறு சரக்குத் துறையும் (ம) துறைமுகத்தின் தெற்கு பகுதியில் 45 ஏக்கர் திறந்த வெளி பரப்பில் பரவனாறு நீர்முகப்புடன் நல்ல சாலை இணைப்புடன் கூடிய பல்வகைப்பட்ட சரக்குகள் கையாள்வதற்கு ஏற்றதாக உள்ளது.
கிடங்குகள்:
3 RCC கிடங்குகள் உள்ளன.
அளவு: 61.75m X 13.00m X 7.00m
தரைப்பகுதி: 803 ச.மீ
கொள்ளளவு: 1700 மெட்ரிக் டன்.
உச்ச உயர் அலைவரிசை தொடர்பு வசதிகள்:
பார்வை நேரம் : 0900 - 1300
சேனல் 16-ல் : 1400 - 1800 (வேலை நாட்களில்)
விடுமுறை நாட்கள் மற்றும் அலுவல்கள் இல்லாத நேரங்களில் கோரிக்கையின் பேரில்.
வழிகாட்டும் கருவிகள்:
துறைமுக கலங்கரை விளக்கானது 19மீ உயரத்தில் 5 வினாடிகளுக்கு ஒரு முறை வெள்ளை நிற ஒளி ஒளிரும்.
புவியியல் அமைவிடம்:
அட்சரேகை: 110 41‘ 80“ வடக்கு
தீர்க்கரேகை: 790 46‘ 36“ கிழக்கு
ஒளிரும் வரம்பு: 15 மைல்கள்
கொடியின் மூலம் சர்வதேச சமிக்ஞைகளின் குறியீடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
துறைமுக வேலை நேரம்:
இந்த துறைமுகம் ஒரு நங்கூரம் துறைமுகமாக இருப்பதால், சாதாரண வேலை நேரம் 0600-1800 மணிநேரம் ஆகும். ஆனால் நிலவும் வானிலையின் அடிப்படையில் இரவு நேரத்தில் செயல்படுவதற்கான அனுமதி பரிசீலிக்கப்படும்.பெயரளவிலான MoT கட்டணங்கள் அலுவலகத்திற்கு வெளியே வேலை செய்யும் நேரங்களுக்குப் பொருந்தும்.
கட்டணம் மற்றும் தீர்வைகள் :
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தற்போதைய கட்டண வீத அட்டவணையின் படி.
அரசு நடைமுறைகள்:
சுங்கம், குடிவரவு மற்றும் துறைமுக சுகாதார அலுவலகங்கள் கடலூரில் உள்ளன.
கப்பல் வருகை அறிவிப்பு:
கப்பல் வருகை அறிவிப்பு 24 மணி நேரத்திற்கு முன் அனுப்பப்படவேண்டும். அனைத்து சட்டப்பூர்வ சான்றிதழ்களின் நகல்களும் நுழைவின் போது முகவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கப்பல்கள் வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு VHF நிலையிலிருந்து நங்கூரம் நிலை பெறலாம். கப்பலின் தலைவர் தானே நங்கூரமிட வேண்டும்.
முகவர்கள், சரக்குகையாளுபவர் (ம) கப்பல் வணிகர்கள்:
அனுபவம் வாய்ந்த துறைமுகம் மற்றும் சுங்கத்துறையில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள், சரக்கேற்றுபவர்கள் (ம) கப்பல் வியாபாரிகள் உள்ளூரில் உள்ளனர். விசைப் படகுகள், கப்பல் மணிகை பொருட்கள், உதிரி பாகங்கள், நன்னீர்&எரிபொருள் மேலே குறிப்பிட்ட முகவர்கள் மூலம் ஏற்பாடு செய்யலாம்.
தொடர்பு:
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அலுவலகம்,
துறைமுக அலுவலர்,
துறைமுக அலுவலகம்,
கடலூர் – 607 003.