எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் துறைமுகம் :
தி/ள் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தினர் 1996ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் (காமராஜர் துறைமுகத்தின் தெற்கே முந்தைய எண்ணூர் பெருந் துறைமுகம்) இந்த துறைமுகத்தை அமைத்தனர். இந்நிறுவனத்தின் உரத் தொழிற்சாலைக்குத் தேவையான திரவ அம்மோனியாவை இறக்குமதி செய்வதற்காக நீர் மூழ்கிக் குழாய்களுடன் கூடிய பன்முனை நங்கூர மிதவை அமைப்புகளை இத்துறைமுகம் கொண்டுள்ளது.
துறைமுக எல்லைகள், வரம்புகள் மற்றும் அரசாணை:
1 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
12’ 19’ |
43’ 40’ |
வடக்கு கிழக்கு |
2 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
12’ 19’ |
59’ 43’ |
வடக்கு கிழக்கு |
3 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
13’ 21’ |
30’ 22’ |
வடக்கு கிழக்கு |
4 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
12’ 21’ |
05.4’ 48.3’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.76, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.என்2), தேதி 21.03.2007.
துறைமுகம் சார்ந்த தொழில்:
தி/ள் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட், சென்னை நிறுவனத்தின் உரத் தொழிற்சாலை.
துறைமுக உள்கட்டமைப்பு/ வசதிகள் பற்றிய விவரங்கள்:
1) இம்முனையத்தில் கடற்கரையிலிருந்து 15மீ ஆழத்தில் அமிழ்குழாய் அமைப்புகளுடன் கூடிய நான்கு முனை நங்கூரமிட்ட அமைப்பு / பன்முனை நங்கூர மிதவை அமைப்புகள் சுமார் 1.8 கி.மீ தொலைவில் உள்ளது.
2) 8“ விட்டம் கொண்ட 2HDPE குழாய்கள் குழாயின் முனை அமைப்புகளில் (PLEM) இருந்து நங்கூரமிட்ட முனையிலிருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள் கரையில் அமைந்துள்ள அம்மோனியா சேமிப்பு தொட்டி வரை செல்கிறது.
3) கப்பல் மிதவைகளுக்கு நேராக வழி காட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட பின்னர் குழாய்கள் கப்பலுடன் இணைக்கப்பட்டு, சரக்கு கப்பலில் இருந்து நேரடியாக கரையோர சேமிப்பு தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.
துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:
தி/ள் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட்,
உரத் தொழிற்சாலை வளாகம், அஞ்சல் பெட்டி எண் 2, விரைவு நெடுஞ்சாலை,
எண்ணூர், சென்னை – 600 057.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : +91-44-25752300/10/20/30
தொலைபேசி : +91-44-25752311.
தொடர்பு விவரங்கள் :
O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம், துறைமுக பாதுகாப்பாளர்,
எண்ணூர் சிறு துறைமுகம்,
தி/ள் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் வளாகம்,
விரைவு நெடுஞ்சாலை, எண்ணூர்,
சென்னை – 600 057.
தமிழ்நாடு, இந்தியா.