நிர்வாகம்
தமிழ்நாடு கடல்சார் வாரியம் :- இந்தியாவின் 7517 கிமீ கடற்கரை எல்லையானது, 12 முக்கிய துறைமுகங்கள், சுமார் 200 முக்கிய அல்லாத துறைமுகங்கள், 8 கடல்சார் மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வரை பரவி உள்ளன.முக்கியத் துறைமுகங்கள், முக்கிய துறைமுகங்கள் டிரஸ்ட் சட்டம் 1963 இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் முக்கிய துறைமுகங்கள் அல்லாத இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908 ன் கீழ் அந்தந்த கடல்சார் மாநிலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.கடல்சார் மாநிலங்களில், குஜராத் ஒரு பெரிய துறைமுகம் மற்றும் சுமார் 40 முக்கிய அல்லாத துறைமுகங்களுடன் சுமார் 1600 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது.3 முக்கிய துறைமுகங்கள் மற்றும் 17 முக்கிய அல்லாத துறைமுகங்களுடன் தமிழகம் இரண்டாவது நீளமான கடற்கரையை (1076 கிமீ) கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் தமிழ்நாடு துறைமுகத்தால் நிர்வகிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கடல்சார் வரலாற்றுக்கு ஏற்பவும், கடல்சார் துறையின் வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசின் துறைமுகத் துறையானது, 18.03.1997 முதல் தமிழ்நாடு கடல்சார் வாரியச் சட்டம், 1995 (தமிழ்நாடு சட்டம் 4/1996) இன்படி தமிழ்நாடு கடல்சார் வாரியமாக மாற்றியமைக்கப்பட்டது. தமிழக அரசின் மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், தலைமையின் கீழ் தமிழ்நாடு கடல்சார் செயல்பட்டு வருகின்றது.குறிக்கோள்கள் :- • பிரத்யோக துறைமுக வசதிகளை வழங்குவதன் மூலம் துறைமுக அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் நிறுவுவதை எளிமைப்படுத்துதல். • கடலோரத்தில் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் மற்றும் துறைமுக அடிப்படையிலான தொழில்களை ஊக்குவிக்க துறைமுக வசதிகளை வழங்குதல். • கிழக்கு கடற்கரையில் கடலோர போக்குவரத்திற்கான வசதிகளை வழங்குவதன் மூலம் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வேக்களை ஒடுக்குதல். • சுற்றுலா, கப்பல் மற்றும் கடலோர வர்த்தகத்தை ஊக்குவித்தல்.